கைவசம் இருக்கிறது ரெண்டே ரெண்டு படங்கள்! : இது ஹன்ஷிகாவின் கவலை

Get real time updates directly on you device, subscribe now.

hanshika

ப்போதுமே கைவசம் அரை டஜன் படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக இருந்தவர் ஹன்ஷிகா. சென்ற ஆண்டு அவர் தான் தமிழில் பீக்கில் இருந்தார்.

ஆனால் எந்த கொள்ளிக்கண் பட்டதோ இந்த ஆண்டு ஹன்ஷிகாவின் மார்க்கெட் சரிவை சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஹன்ஷிகாவின் கைவசம் இருக்கும் படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் வெறும் இரண்டே இரண்டு படங்கள் தான் இருக்கின்றன.

அதிலும் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த மனிதன் படம் இந்த மாதம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் போகன் படம் மட்டுமே ஹன்ஷிகா வசம் இருக்கிறது.

Related Posts
1 of 7

இதற்கும் சம்பளத்தில் எல்லாம் ஹன்ஷிகா கறார் காட்டுவதில்லை என்றாலும் அவருடைய படங்களின் சாய்ஸ் தப்பாக இருக்கிறது என்பது தான் அவரது நலம் விரும்பிகள் கவலையோடு சொல்லும் தகவல்.

சக முன்னணி நடிகைகள் எல்லாம் மாஸ் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்கள். அதையும் விட்டால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் பேய்ப் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறார்கள். ஆனால் ஹன்ஷிகாவோ புதுமுகத்துக்கு ஜோடி என்றாலும் கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் நடிக்க ஓ.கே சொல்லி விடுகிறார்.

இதனால் அவருடைய கேரியரில் தோல்விப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டதால் முன்னணி ஹீரோக்கள் ஹன்ஷிகாவை ஓரங்கட்ட ஆரம்பித்து விட்டார்கள். என்கிறார்கள்.

படங்களை பார்த்து கமிட் பண்ணும்மா ஹன்ஷிகா!