கைகாசைப் போடு; கவலையை விடு : ‘வைகைப்புயல்’ வடிவேலு ரிட்டர்ன்

Get real time updates directly on you device, subscribe now.

IMG_1481

ற்ற ஹீரோக்களின் படங்களில் மீண்டும் காமெடி கேரக்டரில் நடிக்க ஆரம்பித்திருந்தால் கூட இன்றைய தேதியில் வடிவேலு விட்ட மார்க்கெட்டை பிடித்திருக்கலாம். ஏனென்றால் அவருடைய இடம் இன்றைக்கும் எந்த காமெடி நடிகராலும் நிரப்பப்படாமல் தான் இருக்கிறது.

ஆனால் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன், ஹீரோவாக நடித்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டுத்தான் மற்ற ஹீரோக்களின் படங்களில் தலை காட்டுவேன் என்று முரட்டுப் பிடிவாதத்தோடு இருந்தவரின் மனசை களையோ களையென்று கலைத்து விட்டது எலி படம்.

இனிமே ஹீரோ ஆசை வருமா? வருமா? என்கிற ரேஞ்சில் படம் பப்படம் ஆகி விட தனது ஹீரோ கொள்கையை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்திருக்கிறாராம் வடிவேலு.

Related Posts
1 of 5

இனி ஹீரோவாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்தவர் அடுத்து சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டு அதற்கான வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

சூது கவ்வும் டைரக்டர் நலன் குமாரசாமி சொன்ன ஒரு கதை வடிவேலுவுக்கு பிடித்துப் போக, அதை தயாரிக்க யாருமே முன் வராத நிலையில் சொந்தமாக அந்தப்படத்தை தானே தயாரிக்கப் போறாராம்.

முந்தைய படங்களைப் போல ஹீரோ அந்தந்து இதில் வடிவேலுவுக்கு இல்லை. அதேசமயம் பேசப்படும் கேரக்டராக இருக்கும் என்கிறார்கள்.