‘வை ராஜா வை’ படத்தை கைப்பற்றியது ஸ்டூடியோ க்ரீன்
‘3’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்தை பிரபல தயாரிப்பு மற்றும் ரிலீஸ் நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழக உரிமையை வாங்கியுள்ளது.
மே 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்ஸீ, டேனியல் பாலாஜி, மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கொக்கி குமாரு’ என்ற ‘புதுப்பேட்டை’ பட கேரக்டரில் தனுஷ் சிறப்புத் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி, பொன்ராம் இயக்கிய ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ‘வை ராஜா வை’ படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை வாங்கியுள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்த ‘கொம்பன்’ படம் பல தடைகளைத் தாண்டி சமீபத்தில் ரிலீசாகி வசூலை வாரிக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.