படம் எடுப்பதை விட புரமோட் செய்வது தான் முக்கிய வேலை -இயக்குநர் V சேகர்!

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
வள்ளிமலை வேலன் ஆடியோ ரிலீஸ், பாடல்கள் பார்த்தேன் அப்பா பாடல் மிக அருமையாக இருந்தது. சுரேந்தர் பாடியுள்ளார், என் படத்தில் பாடல் பாடியவர், நண்பர்கள் நாங்கள், சினிமா பல அழகான உறவுகளைத் தருகிறது. இயக்குநர் V சேகர், இப்போது சினிமா இருக்கும் மோசமான நிலையை அருமையாகப் பேசினார். இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது. சினிமா மோசமாக இருக்க அரசு தான் காரணம், அரசு தான் முறையாக எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். அந்த காலத்தில் கதை அவ்வளவு ஈஸியாக எல்லாம் ஓகே ஆகிவிடாது, ஒரு படம் எடுத்தால் விநியோகஸ்தர் வரை கதை சொல்ல வேண்டும். இப்போது யாராவது கதை சொல்கிறார்களா?, சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும். சின்னப்படங்களை தவமிருந்து கொண்டு வருகிறார்கள், ஆனால் தியேட்டர் கிடைப்பதில்லை. தயாரிப்பாளர்கள் இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் முடுவெடுக்க வேண்டும். இப்போது சினிமா என்றால் என்னவென்றே தெரியாத தயாரிப்பாளர்கள் தான் இன்று நிறைய இருக்கிறார்கள். பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் நிறைய ஓடுகிறது ஆனால் அதற்கான வாய்ப்பைத் தர வேண்டும். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை, சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தது. எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
இப்படத்தில் எம் நாகரத்தினம் நாயகனாக நடிக்க, இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.கிராமத்து பின்னணியில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அழகான கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் எஸ் மோகன். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ கே ஆல்ட்ரின் இசையமைத்துள்ளார். ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்ய, இடி மின்னல் இளங்கோ சண்டைப்பயிற்சி செய்துள்ளார்.