பொறி பறக்கும் “வீரமேவாகைசூடும்” டிரைலர்!

‘வீரமே வாகை சூடும்’ இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.

விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து VFF நிறுவனமும், விஷால் சாரும் காட்டும் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி. அதையும் விட அவர் மிகப் பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும் கடைநிலை ஊழியர் வரை யாருடைய மனதும் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்.
இப்படத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார் இயக்குனர். இறுதியாக வீரமே வாகை சூடும் என்று கூறினார். இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக தோன்றியது. அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் என்று இருப்பது போல், சக்திவாய்ந்த பெயராக இருந்தது. இந்த கதைக்கும், கதாநாயகனுக்கும் சாலச் சிறந்ததாக இருந்தது. வீரம் என்ற சொல்லுக்கு விஷால் சாரைப் பொருத்திப் பார்க்கலாம்.