ஜென்ம நட்சத்திரம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஹாரரும் திரில்லரும் கலந்த கலவையாக வந்துள்ளது ஜென்ம நட்சத்திரம்

நாயகன் தமனுக்கு படம் இயக்குவது பெரும் கனவு. ஒருபுறம் அரசியல் வாதி வேல. தேர்தல் பணத்தை காளி வெங்கடிடம் கொடுத்து டிஸ்டிபியுட் பண்ணச் சொல்கிறார்கள். காளி வெங்கட்டிற்கு ஒரு தேவை ஏற்படுகிறது. அதனால் காளி வெங்கட் 57 கோடியை பதுக்குகிறார். ஹீரோ தமனுக்கும் இந்த 57 கோடிக்கும் ஒரு லிங் வருகிறது. அந்த லிங் என்ன? இந்தக் கதையில் பேய் எப்படி வந்தது? என்பதெல்லாம் படத்தின் திரைக்கதை

கதையின் நாயகனாக தமன் கவரவே செய்கிறார். ப்யூச்சரில் ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான சமிக்‌ஷை அவரது பாடிலாங்குவேஜில் தெரிகிறது. நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். காளி வெங்கட் தனது பணியை நிறைவாகச் செய்துள்ளார். வேல.ராமமூர்த்தி வழக்கம் போல டெரர் காட்ட முயற்சித்துள்ளார். முனிஷ்காந்த் காமெடி துளியும் எடுபடவில்லை

இசை அமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் பின்னணி இசையை அடக்கி வாசித்துள்ளார். அது சிறப்பாக வொர்க் ஆகியுள்ளது. பாடல்கள் தேறவில்லை. ஒளிப்பதிவாளர் இது பட்ஜெட் படம் என்பதை எல்லாப் பிரேமிலும் காட்டிக் கொடுக்கிறார். எடிட்டர் கச்சிதமாக செயல்படவில்லை. இயக்குநரும் அதற்கு ஒத்துழைக்கவில்லை

படம் துவக்கத்திலிருந்தே நேர்கோட்டில் பயணிக்கவில்லை. அதனால் படம் மீது நமக்கு கனெக்டிங் ஏற்படவே இல்லை. ஒருநொடி கொடுத்த இயக்குநர் மணிவர்மன் மறுபடியும் இப்படி ஏமாற்றக்கூடாது
2.25/5