உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? : வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட நயன்தாரா!

‘கத்தி சண்டை’ படத்தில் தமன்னாவின் கவர்ச்சி ஆடைகள் குறித்துப் பேசிய டைரக்டர் சுராஜ் ”காசு கொடுத்து தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் நடிகைகளின் கவர்ச்சியைப் பார்ப்பதற்காகத்தான் வருகிறார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிக்கத்தான் வேண்டும், அதற்காகத்தான் அவர்கள் கேட்கிற சம்பளத்தை கொடுக்கிறார்கள்.” என்று கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.
அவரின் இந்த கமெண்ட்ஸ் திரையுலகில் உள்ள நடிகைகள் மத்தியில் பரவலான எதிர்ப்பு விமர்சனங்களை எதிர்கொண்டது.
குறிப்பாக சுராஜின் இந்த கருத்துக்கு முன்னணி நடிகைகளின் ஒருவரான நயன்தாரா கடும் எதிர்ப்பைக் காட்டினார். ”நடிகைகள் என்றாலே காசுக்காக அலைபவர்கள் என்று நினைத்தீர்களா? உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் இவ்வாறு சொல்வீர்களா?” என்றெல்லாம் பொங்கினார்.
தான் அடித்த கமெண்ட் வைரலாகி வருவதை கவனித்த டைரக்டர் சுராஜ் உடனே ”எல்லா நடிகைகளும் என்னை மன்னிக்க வேண்டும்.” ”மன்னித்து விடுங்கள்” என்று மறுப்பு தெரிவித்தார்.
அத்தோடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டாலும், இந்த விவகாரத்தில் நயன்தாரா முந்திக் கொண்டு கருத்து சொன்னது தான் ரசிகர்களை டென்ஷனாக்கி விட்டது. சமூக வலைத்தளங்களில் நயன்தாராவுக்கு எதிராக ரசிகர்கள் கடும் எதிர்ப்பை காட்டத் தொடங்கி விட்டார்கள்.
‘பில்லா’ படத்தில் தேவைப்படதா காட்சியில் நீச்சல் உடையில் வந்தீர்கள்.
‘ஏகன்’ படத்தில் கல்லூரி ஆசிரியராக பின் முதுகை முழுவதுமாக திறந்து காட்டியபடி வந்து புனிதமான ஆசிரியர் பணியையே கேவலப்படுத்தியவர் நீங்கள். அதெல்லாம் காசுக்காக இல்லாமல் வேறு எதற்காகவாம்? எந்த கல்லூரியில் ஆசிரியர்கள் அப்படி அரை குறையாக சேலை அணிந்து வருகிறார்கள்?
ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் வேண்டுமானால் இந்த விஷயத்தில் கருத்து சொல்லியிருக்கலாம். ஆனால் இதைப்பற்றி கருத்துச் சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? என்றெல்லாம் கமெண்ட்டுகளை குவித்து நயனை உண்டு இல்லை என்று கிழித்து தொங்க விட்டு விட்டார்கள்.
ரசிகர்களின் இந்த பதில் தாக்குதலை கொஞ்சமும் எதிர்பார்க்காத நயன் சைலண்ட்டாகவே இருந்து விட்டார்.
எதுக்கு வாயைக் கொடுப்பானேன்… வாங்கிக் கட்டிக் கொள்வானேன்…