‘வேதாளம்’ ரிஸ்க் : இதெல்லாம் அஜித்துக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி…

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

தோ இன்னும் சில தினங்களில் வழக்கமான தீபாவளி தல தீபாவளி ஆகப் போகிறது. இந்த ஆண்டும் அஜித்தின் வேதாளம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் கட்-அவுட், பேனர்கள், போஸ்டர்கள் என கொண்டாடத் துவங்கியுள்ளனர்.

கதைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கும் அஜித் இந்தப்படத்திலும் அந்த ரிஸ்க் ஒன்றை எடுத்திருக்கிறாராம்.

இது அஜித் சாருக்கு 56-வது படம், இதுவரைக்கும் நடிச்ச படங்களை விட இந்தப்படத்துல அஜித் சாரோட உழைப்பு ரொம்ப இருக்கு. .

Related Posts
1 of 54

படத்தோட ஒரு காட்சியில இத்தாலி கப்பலில் சண்டைப் போடுற மாதிரி வரும். ரொம்ப ரிஸ்க்கான அந்தக் காட்சியில டூப்பே போடாம அஜித் சார் நடிச்சிருக்கார். அதுமட்டும் இல்ல, கொல்கத்தாவில் ஷூட்டிங் நடந்தப்போ டிராபிக் அதிகமா இருக்கிற ரோட்ல அவரே ஓடுற மாதிரி காட்சியில டூப்பே போடாம நடிச்சுக் கொடுத்தார்.

அடையாளம் கண்டுக்கிட்டா ரசிகர்கள் மொய்ப்பாங்கன்னு தெரிஞ்சும் அவரே அதுல நடிச்சது மறக்க முடியாதது. இந்த மாதிரி சீன்கள்ல மத்த ஹீரோக்கள் நடிப்பாங்களா இல்லையாங்கிறது ஆச்சரியம் தான் என்கிறார் இயக்குநர் சிவா.

ஏற்கனவே மங்காத்தா படத்தில் விமானத்தில் தொங்கினார். அடுத்து ‘ஆரம்பம்’ படப்பிடிப்பின் போதும் ரிஸ்க்கான காட்சிகளில் நடித்தபோது அஜித் காலில் அடிப்பட்டு இருந்தது.  இப்போது வேதாளம் படத்திலும் ரிஸ்க்கான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அஜித்துக்குத்தான் ரிக்ஸ் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி ஆச்சே…?