பிஜி தீவுகளில் ‘பார்ட்டி’ : மூன்று ஹீரோயின்களுடன் கிளம்பினார் வெங்கட்பிரபு
‘சென்னை 28 இரண்டாம் பாகம்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார் டைரக்டர் வெங்கட்பிரபு.
‘பார்ட்டி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். இதே நிறுவனத்துக்காக ‘சரோஜா’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கட்பிரபு இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர குவியலே பங்கேற்கும் இந்தப் பார்ட்டியில் நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என மூன்று லட்டு லட்டான ஹீரோயின்களும் பங்கேற்கிறார்கள்.
வெங்கட்பிரபு படமென்றால் வழக்கமாக ஏதாவது ஒரு கேரக்டர் ரோலில் நடிக்கும் அவரது தம்பி பிரேம்ஜி இதில் நடிக்கவில்லை. மாறாக முதல் முறையாக இப்படத்துக்கு அவர் இசையமைக்கிறார். கே எல் பிரவீன் படத்தொகுப்பு செய்ய, படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிஜி தீவுகளில் படமாக்கக்பட இருக்கும் பார்ட்டி சகலவிதமான போதைகளுடன் தயாராகி வருகிறது என்பது மட்டும் உறுதி!