மீண்டும் இணைந்த சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி

Get real time updates directly on you device, subscribe now.

மிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து ‘ஜாக்சன் துரை’ வெற்றிப் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

கடந்த ஆண்டின் கவனிக்கத்தக்க படமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சத்யா’.

Related Posts
1 of 143

இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் இப்படத்தில் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் சார்பில் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார். படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழுவினர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.