‘இந்த லவ் எத்தனை நாளைக்கு..?’ : நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி!

Get real time updates directly on you device, subscribe now.

nayan

சில நட்சத்திர ஜோடிகளை ரசிகர்கள் நல்ல ஜோடிப்பொருத்தம் என்று மனதார வாழ்த்துவார்கள்.

சில ஜோடிகளையோ ”என்னங்கடா… இது காம்பினேஷன்” என்று எரிச்சலைக் கொட்டி கழுவி கழுவி ஊற்றுவார்கள்.

நயன்தாரா வாழ்க்கையில் சிம்பு, பிரபுதேவாவைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் இது மூன்றாவது காதல் என்பதாலோ என்னவோ, இந்த காம்பினேஷன் காதலை ரசிகர்கள் செமத்தையாக கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேற்று டைரக்டர் விக்னேஷ் சிவன் தன் பிறந்த நாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நயன்தாராவுடன் சேர்ந்து கொண்டாடினார். அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார். வாழ்த்துகள் குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு அடுத்தடுத்து வந்த கமெண்ட்டுகள் காது கொண்டு கேட்கா ரகமான அர்ச்சனைகளாகி விட்டது. வெளியான சில நிமிடங்களுக்குள் வைரலான அந்தப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் செம கலாய் கலாய்த்திருக்கிறார்கள்.

அதில் சிலவற்றை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறோம்…

”நீ இவரை நெனைச்சு வாழா வெட்டியா இருக்கப் போற… நான் உன்னையே நெனைச்சு வெட்டியா வாழாம இருக்கப் போறேன்…”

”முன்னாள் காதலி வேறொருத்தர் கூட இருக்கிறதைப் பார்த்தா இப்படித்தான் ஃபீல் ஆகுமாம். சிம்பு பாவம் சிம்பு பாவம்!”

”எங்கிருந்தாலும் வாழ்க இஸ் எ வாழ்த்து… நல்லாருங்கடா டேய் இஸ் என் எமோஷன்… போல!”

Related Posts
1 of 52

nayan3

”வயிறு எரியுதுய்யா… மொமென்ட். ‘

‘த்தூ… அடுத்து உங்க லிஸ்டுல இவரா?’

”என்னால தாங்க முடியல நயன் ! ஏன் இப்படி வெறுப்பை உண்டாக்குறீங்க”

”வேணாம்…வலிக்குது…அழுதுடுவேன்…”

”பங்காளிக்கு வாழ்த்துக்கள்…”

‘நல்லா இருங்கடா டேய்…’

‘இந்த லவ் எத்தனை நாளைக்கு..?’ 

‘நயன் விக்னேஷ் சிவனையாவது மேரேஜ் பண்ணிப்பீங்களா? இல்லேன்னா வழக்கம் போல கழட்டி விட்டுடுவீங்களா..?’