‘விஜய் 59’ டைட்டில் ட்ரபுள்! : அட்லிக்கு விஜய் அட்வைஸ்
அக்டோபர் 2 ம் தேதி ‘புலி’ ரிலீசுக்குத் தயாராகி வருகிறது.
இதையடுத்து விஜய்யின் 59-வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.
அஜித் படங்களைப் போலவே விஜய் படங்களும் டைட்டில் வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வருகிறதே என்று விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் ‘விஜய் 59’ படத்துக்கு ரஜினியின் ‘மூன்று முகம்’ டைட்டிலும், வெற்றி என்ற டைட்டிலும் கிசுகிசுக்கப்பட்டன. இதில் ‘மூன்று முகம்’ டைட்டில் கிடைக்கவில்லை. அதேபோல வெற்றி என்ற டைட்டிலையும் வெறொரு நிறுவனம் பதிவு செய்து வைத்திருக்கிறது.
இதனால் எதற்கு வம்பு என்று புதிதாக டைட்டிலை யோசிக்கச் சொல்லியிருக்கிறாராம் விஜய்.
‘புலி’ ரிலீசாகும் அன்றே புதுப்பட டைட்டிலும் அறிவிக்கப்படலாம் என்பதால் அட்லி டைட்டில் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.