இங்கே இவ்ளோ அமளிதுமளி நடக்கும் போது… இவரு என்னய்யா பண்றாரு?
“என் நெஞ்சில் குடியிருக்கும்” என்று விஜய் பேச ஆரம்பித்தால் நெஞ்சைப் பிளந்து காட்டும் ரசிகக்கூட்டம் தமிழ்நாட்டில் உண்டு. இன்று கொரோனா கொடுத்துள்ள மாபெரும் குடைச்சலில் அந்த ரசிகக் கண்மணிகள் உள்பட நாடே கெதி கலங்கிப்போய் கிடக்கிறது. ஒருபுறம் ரஜினி மெழுகுவர்த்தி ஏந்தி தன் தேசப்பற்றைக் காண்பிக்கிறார்..மறுபுறம் கமல்ஹாசன் உண்மை நிலையை விளக்கி கொல காண்டில் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
ரஜினி கமலைத் தொடர்ந்து அரசியல் என்ட்ரிக்கு விதை போட்டு வரும் விஜய் மட்டும் கப்சிப். சரி மக்கள் பிரச்சனையை கண்டுக்காமல் விட்டாலும் அவர் சார்ந்துள்ள சினிமாவில் பெப்ஸி தொழிலார்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்கள். அதையாவது ஏறெடுத்துப் பார்க்கலாமே? ம்ஹும். தளபதியும் அவர் நண்பர் அஜித் மாதிரி தல மறைவு வாழ்க்கை நடத்துகிறார் போல!
இதையெல்லாம் பார்க்கும் போது நாட்டாமைப் படத்தில் கவுண்டமணி பேசும் ஒரு டயலாக் தான் ஞாபகம் வருகிறது. அதான் தலைப்பு!