விஜய் ரசிகர்களுக்கு அட்லி தரும் தீபாவளி சர்ப்ரைஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

எப்படி ‘வேதாளம்’ டைட்டிலுக்காக அஜித் ரசிகர்கள் மாதக்கணக்கில் காத்துக் கிடந்தார்களோ? கிட்டத்தட்ட அப்படி ஒரு சூழலுக்கு விஜய் ரசிகர்களையும் கொண்டு வந்து விட்டார் இயக்குநர் அட்லி.

விஜய்யை வைத்து இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அட்லி படத்துக்கு மூன்றுமுகம் என்கிற ரஜினி பட டைட்டிலை வைக்க முடிவு செய்தார். ஆனால் அந்த டைட்டிலுக்கு சொந்தக் காரர்கள் நல்ல முடிவைச் சொல்லாததால் வேறு டைட்டிலை யோசிப்போம் என்று படப்பிடிப்பை வேகமாகத்தான் நடத்தி வருகிறார்.

விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப்படம் சத்ரியன் படத்தின் ரீமேக் என்கிற சந்தேகம் வலுத்து வரும் நிலையில் பிரபல இயக்குநர் மகேந்திரன் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

Related Posts
1 of 77

முழுப்படப்பிடிப்பும் விரைவில் முடிய உள்ள நிலையில் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கப்போகிறார் என்கிற ஆவல் விஜய் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

அப்படி தூக்கமில்லாமல் திரியும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பாக செய்தி வந்திருக்கிறது.

ஆமாம், மக்களே… வரும் தீபாவளி தினத்தன்று படத்தின் டைட்டில், மற்றும் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் இயக்குநர் அட்லி.

அதுவரை நிம்மதியா தூங்குங்கப்பா…