எதுக்கும் கத்து வெச்சுக்குவோம் : ரொம்பத்தான் உஷாரு நித்யாமேனன்!

Get real time updates directly on you device, subscribe now.

Nithya-Menon

மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ வெற்றிப்படமாக அமைந்தாலும் இடையில் எதிர்பார்த்த புதுப்பட வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

இருந்தாலும் மனம் தளராமல் வாய்ப்பு வேட்டையாட கைவசம் அப்பாவின் மீசை, சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன், சுதீப் உடன் முடிஞ்சா இவன் புடி என நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார்.

கன்னடத்தில் சுதீப் ஜோடியாக வாய்ப்பு வந்த போது மறுக்காமல் கால்ஷீட் கொடுத்தவர் அவரது காதல் வலையிலும் விழுந்து விட்டதாக கன்னட தேசம் கதை கட்டி விட்டுக்கொண்டிருக்கிறது.

வழக்கம் போல நித்யாவும் அது காதல் அல்ல, வெறும் நட்பு என்று வாசிக்கும் நித்யா நடிப்பதோடு மட்டுமில்லாமல் பாடுவது, கதை எழுதுவது என மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

ஷூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் பாடல்கள் பாடுவது, கதைகள் எழுதுவது என ரூட்டை மாற்றுகிறார்.

ஒரு இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறதாம்.

ஒருவேளை நடிகையாக வாய்ப்பு குறையும் போது இயக்குநராக சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாமே என்கிற நப்பாசை தான் நித்யாவை இப்படி பேனாவும், பேப்பருமாக மாற்றியிருக்கிறது.

என்றைக்கு நடிக்கிற வாய்ப்பு இல்லாமல் போகிறதோ? அன்றைக்கே படம் இயக்கத் தயாராகி விடுவாராம் நித்யா.

ஆளு தான் அரை ஜான், ஆனா வேலையில ரொம்ப ‘உஷார்’!