விஜய்யின் 60 -வது படத்துக்கு போட்டி போடும் இயக்குநர்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

ட்லீ இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார் இளையதளபதி விஜய். இது விஜய்க்கு 59-வது படம். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய சீக்கிரம் நிறைவடைய உள்ளதால் விஜய்யின் அடுத்த பட இயக்குநர் யார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்து விட்டது.

Related Posts
1 of 77

அடுத்தது விஜய்யின் 60-வது படமென்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்க ஏ.ஜே.சூர்யா, மோகன் ராஜா என இரண்டு இயக்குநர்களின் கதைகளும் பிடித்துப் போய் நடிக்க சம்மதித்திருக்கிறார் விஜய்.

அதில் யாருடைய இயக்கத்தில் முதலில் நடிப்பது என்பதில் தான் விஜய்க்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த குழப்பத்துக்கு மத்தியிலும் தனி ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து விட்டதால் அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தான் விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.