‘எங்கு பார்த்தாலும் ஓவியா தான்’ : விமல் ஹேப்பி அண்ணாச்சி

Get real time updates directly on you device, subscribe now.

vimal

வியாவின் அறிமுகப்படமான ‘களவாணி’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் விமல் தான். அந்தப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் அதன்பிறகு எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் படங்கள் ஓவியாவுக்கு அமையவில்லை. அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா எந்த சூழலையும் சிரித்தே சமாளிக்கும் அவருடைய நடவடிக்கை ரசிகர்களை ஈர்த்தது.

Related Posts
1 of 17

‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் அவர் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. இப்படி ரசிகர்கள் மத்தியில் தன்னுடன் நடித்த ஓவியா பிரபலமானது தனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் விமல்.

‘எங்கு பார்த்தாலும் ஓவியா மயமாக இருக்கிறது. அவருடன் நீங்கள் நடித்தீர்களா? என என்னிடம் பலர் கேட்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இது ஓவியாவின் நடவடிக்கைகளை பார்த்தாலே புரிகிறது. நிஜ வாழ்வில் எப்படி இருப்பாரோ, அப்படித்தான் அந்த நிகழ்ச்சியிலும் அவர் இருக்கிறார். இளைஞர் மத்தியில் ஓவியா நல்ல பெயர் எடுத்து விட்டார். இதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார் விமல்.