ஆமாம், நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது : லேட்டாக ஃபீல் பண்ணிய தனுஷ்

தனது ‘விஐபி2’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் ஹைதராபாத் சென்றிருந்தார் நடிகர் தனுஷ்.
அங்கு தனுஷ் பிரபல தெலுங்கு சேனலான ‘டிவி 9’ சேனலுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் தனுஷ்.
அந்த பேட்டியில் தனுஷை நேர்காணல் செய்து கொண்டிருந்த பெண் தொகுப்பாளர் விஜபி 2 படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் திடீரென்று சுசீ லீக்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மத்தியில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் கேள்விகளை எழுப்பினார். இதனால் கோபத்துக்குள்ளான தனுஷ் குடும்ப பிரச்சனை போன்ற மற்ற முட்டாள் தனமான கேள்விகளை கேட்காதீர்கள் என கூறி மைக்கை தூக்கி எறிந்தும் விட்டு பேட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
பின்னர் சில நிமிடங்கள் கழித்து மீண்டு பேட்டியைத் தொடர்ந்தாலும் அந்த நிகழ்வு பரபரப்பாகப் பேசப்பட்டது.
குறிப்பாக எப்போதுமே அமைதியாக இருக்கும் தனுஷ் ஏன் இப்படி நடந்து கொண்டார்? கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் பாஸ் என்று ஒரே வார்த்தையில் கேள்விகளை தவிர்த்திருக்கலாமே என்று அந்த வீடியோவைப் பார்த்த பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
இப்போது தான் நடந்து கொண்ட அந்த நிகழ்வு பற்றி கருத்து தெரிவித்திருக்கும் தனுஷ் “அப்படி நடந்து கொண்டது எனக்கே வேடிக்கையாக உள்ளது.” என்று கூறியிருக்கிறார்.
மேலும் பொதுவாக நான் சைலண்ட்டான ஆள். ஆனால், அன்று அப்படி நடந்து கொண்டேன். அவர் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு பதிலளிக்க விருப்பமில்லை. ‘விஐபி2’ பட வேலை காரணமாக கடந்த 2 வாரங்களாக நான் சரியாக தூங்கவில்லை. அந்தக் கோபத்தில் கூட நான் அப்படி நடந்து கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன். அந்த வீடியோவை இப்போது பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.