அடுத்ததும் ஆபாசம்! : ‘வெர்ஜின்’ கூட்டணிக்கு கட்டம் சரியில்லை போலிருக்கு?

Get real time updates directly on you device, subscribe now.

gvp

ற்கனவே ‘பீப் சாங்’ விவாகரத்தில் உச்சபட்சமாக பெயர் கெட்டுப்போய் கிடப்பதில் வருத்தத்தில் இருக்கிறார் சிம்பு.

அவர் படும் பாட்டைப் பார்த்து மற்ற இளம் ஹீரோக்கள் பாத்ரூமில் பாடினால் கூட சன்னமாகத்தான் பாடுகிறார்கள்.

அந்தளவுக்கு பெரும் சர்ச்சையில் சிம்பு தலையைக் கொடுத்து விட்டு தத்தளித்துக் கொண்டிருக்க, பிரச்சனை வரும் என்று தெரிந்தே தான் நடிக்கும் புதுப்படத்துக்கு கிளுகிளுப்பான டைட்டில் ஒன்றை சிபாரிசு செய்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

Related Posts
1 of 8

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் ‘ஏ’டாகூடமான வெற்றிக்குப் பிறகு அதே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதுப்படத்தில் இணையப்போகிறார் ஜி.வி. இந்தப் படத்துக்கு வைக்கப்போகும் டைட்டில் தான் பெரிய வில்லங்கத்தை கொண்டு வரும் போலிருக்கிறது.

முந்தைய படத்தில் ”வெர்ஜின் பசங்க சாபம் உங்களை சும்மா விடாதுடு” என்கிற வசனம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த சென்டிமெண்ட் காரணமாக இந்த படத்துக்கு ‘விர்ஜின் மாப்ள’ என்ற டைட்டிலை வைக்கச் சொல்லி சிபாரிசு செய்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

”த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படம் ரிலீசானபோதே அந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை சில பெண்கள் படம் பார்க்கப் போன தியேட்டரில் அடித்து உதைத்த சம்பவம் நடந்தது.

அது தெரிந்தும் கூட அடுத்த படத்துக்கு இப்படியொரு ஆபாச டைட்டிலை வைக்க துணிவது ரிலீஸ் நேரத்தில் பெரிய சிக்கலை சந்திக்கும் என்பது மட்டும் நிஜம்.