அரசாங்கம் மக்களுக்காகத் தான், வேறு யாருக்கும் அல்ல – விளாசிய விஷால்
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையால் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போலீசாரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை நடிகர் விஷால் கடுமையாக கண்டித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
”இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல. 50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள், பொதுஜன நலத்துக்காக தான் போராடுகிறார்கள் .
மரியாதைக்கூறிய பிரதமர் கண்டிப்பாக தன்னுடைய அமைதியான மனநிலையை கலைக்க வேண்டிய நேரம் இது. போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று. அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது.
அரசாங்கம் மக்களுக்காக தான். வேறு யாருக்கும் அல்ல. 2019 பற்றி மக்கள் கவனமாக யோசிக்க வேண்டும்.” இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.