”என்னை கட்டிப்பிடிக்க ஆளில்லை…” : பிக் பாஸ் வீட்டுக்குள் ஷாக் கொடுத்த ஜூலி!

Get real time updates directly on you device, subscribe now.

Juliana

”நேத்து வந்த ஆயாம்மா நீயெல்லாம் சி.எம்மா” ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஓங்கி ஒலித்த இந்தக்குரலைக் கேட்காதவர்களே இருக்க முடியாது.

பிரபலமான அந்தக் குரலுக்கு சொந்தக்காரரான ஜூலியை விஜய் டிவி தனது ”பிக் பாஸ்” ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பாளராக இறக்கி விட்டிருக்கிறது.

ஜூலி பங்கேற்ற முதல் நாளே வீட்டுக்குள் அவர் செய்த ஒரு செயல் பெரும் சர்ச்சையை கிளப்பி விட, அது சமூகவலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றப்படும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.

நேற்றைய முதல் நாள் எபிசோடில் கலந்து கொண்ட ஜூலி நடிகர் ஸ்ரீயிடம் பேசிய பேச்சு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரையும் தூக்கி வாரிப்போட்டது.

Related Posts
1 of 8

எபிசோடில் காட்டப்பட்ட காட்சியில் சக பங்கேற்பாளரான இளம் நடிகர் ஸ்ரீ சோபா பக்கம் வந்த போது அவரை அமர வைத்து செட்டுக்குள் வந்தபோது ஒவ்வொரு பங்கேற்பாளர்களும் கட்டிப்பிடித்து வரவேற்றுக் கொண்டதை அவர் நினைவுபடுத்தி பேசியவர் “ஒவ்வொருத்தரும் கட்டிப்பிடிச்சிக்கிறாங்க…, எனக்கு யாருமே இல்லை, என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப்பாரு… தயவு செஞ்சு பிக்பாஸ் வீட்டை விட்டு நீ போகாத…” என்று பகீர் கிளப்பினார்.

அவர் அப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, அந்தப்பக்கம் சக போட்டியாளர் ஒருவர் நடந்து சென்றதால் அந்தப் பேச்சு அப்படியே நின்று விட்டது.

இந்தக் காட்சியை பார்த்து கோபமடைந்த நெட்டிசன்கள் ஜூலியில் அந்தச் செயலைப்பற்றி சமூகவலைத்தளங்களில் வகைதொகையில்லாமல் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஜூலி மீது கோபம் ஒருபுறம் இருந்தாலும், இது விஜய்டிவியே பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக ஜூலியை இப்படியெல்லாம் பேசச்சொல்லியிருக்குமோ? என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை.