வரலட்சுமியுடன் தான் திருமணம்! : வெளிப்படையாக அறிவித்தார் விஷால்!

Get real time updates directly on you device, subscribe now.

vishal

கிசுகிசுவாகவே இருந்து விஷால் – வரலட்சுமியின் காதல் கடந்த சில மாதங்களாக வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொள்ளும் விஷாலிடம் அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்பதும் வாடிக்கையாகி விட்டது.

அதே போல மீடியாக்களை சந்திக்கும் போது அவருடைய திருமணம் பற்றிய கேள்வி தவிர்க்காமல் வந்து விழும்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக விஷாலும் நடிகை வரலட்சுமியும் காதலித்து வருகிறார்கள் என்பது மீடியாக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

Related Posts
1 of 69

அவ்வப்போது இதுகுறித்து மீடியாக்கள் கேட்கும் போதெல்லாம் கண்டிப்பாக என் திருமணம் காதல் திருமணம் தான் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நழுவி விடுவார்.

இப்போது அவரே அந்தச் செய்தியை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து மனம் திறந்து பேசிய விஷால் ‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்

தான்.  2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம்  நடக்கும். அதற்காக இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்து விட்டேன்.’ என்று கூறியுள்ளார்.

திருமணம் உறுதி என்று கூறிய விஷால் வரலட்சுமியை காதலிப்பதை மறுக்கவில்லை. ஆகவே விஷால் வரலட்சுமியை காதலிப்பதும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதும் உண்மையாகி  விட்டது.