தமிழ்சினிமாவை பாதிக்கக்கூடிய விஷயங்கள் தான் அதிகமா நடக்குது! : விஷால் கவலை

Get real time updates directly on you device, subscribe now.

vishal

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் ஆண்டுக் கணக்கு வெளியிடப்பட்டது. மேலும், விழாவில் பழம்பெரும் நடிகைகளான காஞ்சனா, ஷீலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசுகையில்:

Related Posts
1 of 74

”நடிகர் சங்கக் கட்டிடம் வந்தவுடன் தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளேன். அதுவரைக்கும் கார்த்தியின் முன்பு பட்டு வேஷ்டி சட்டையுடன் தான் நிற்பேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தி, வாசலில் நானும் நிற்கிறோம்.

எங்கள் நிர்வாகத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். எம்.ஜி.ஆர்.ஆர் ஆவியோ, சிவாஜி ஆவியோ கட்டிட நிலத்தில் புகுந்து விட்டது. கட்டிடம் கட்ட முடியும் வரை போகாது. மறுபடியும் வழக்கு போட்டுப் போரடிக்காதீர்கள். வருகிறாயா… வா என்று நேர்மையுடன் நிற்கிறோம். என்றைக்குமே நேர்மை மட்டுமே ஜெயிக்கும். முதலில் பொதுச்செயலாளராக வருவேன் என்று தெரியாது.

மறுபடியும் இன்னொரு இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஆனேன். ஆனால், முதலில் நடிகர் சங்கமே முக்கியம். இந்தக் கட்டிடம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். விரைவில் எம்ஜிஆர் சமாதியைப் பார்த்து விட்டு நடிகர் சங்கக் கட்டிடத்தைப் பார்க்க வருவது போன்ற ரீதியில் கட்டிடம் இருக்கும். அடுத்த தேர்தலிலும் நிற்போம். ஏனென்றால் கட்டிடத்தைப் பாதியில் விட்டுவிட்டுப் போகும் எண்ணமில்லை.

தமிழ் சினிமாவுக்குத் தமிழக அரசு 10% கேளிக்கை வரி விதித்திருக்கிறது. இந்தக் கேளிக்கை வரி எந்த மாநிலத்திலும் இல்லை.  இந்தச் சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்தால் தான் தமிழ் சினிமா நிலைக்கும். கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி, திருட்டு விசிடி என அனைத்து இடர்ப்பாடுகளுக்கு இடையே தமிழ்சினிமா செயல்பட்டு வருகிறது. கேளிக்கை வரியை ரத்து செய்யாவிட்டால் செயல்படவே முடியாது, கடந்த சில வருடங்களாக தமிழ்சினிமாவை பாதிக்கக்கூடிய விஷயங்கள் தான் அதிகம் நடக்கிறது” என்று கவலையோடு தெரிவித்தார் விஷால்.