தனுஷுக்கு ‘லிப் கிஸ்’ – அடேங்கப்பா… ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

ஹோம்லி கேரக்டர் என்றாலே சில நடிகைகளை இயக்குனர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அந்த வரிசையில் உள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மாடர்ன் உடைகளில் சில படங்களில் வந்தாலும் கவர்ச்சி, லிப் கிஸ் போன்ற சமாச்சாரங்களில் தலை காட்டாமல் தான் இருந்தார்.

அப்படிப்பட்டவர் ‘வட சென்னை’ படத்தில் ”அடேங்கப்பா ஐஸ்வர்யா ராஜேஷா இது?” என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு முத்தக்காட்சி ஒன்றில் நடித்து அசத்தியிருக்கிறாராம்.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் இந்தப் பிரம்மாண்டப்படம் வடசென்னை மக்களின் முந்தைய காலத்து வாழ்க்கை முறையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

வடசென்னை படத்தில் தனுஷ் -ஐஸ்வர்யா ராஜேஷ்!
Related Posts
1 of 42

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸரில் தான் இந்த முத்தக் காட்சி சீக்ரெட் வெளியாகியிருக்கிறது.

படத்தில் பக்கா வடசென்னை இளைஞராகவே வரும் தனுஷும் ஐஸ்வர்யா ராஜேஷும் உதட்டுடன் உதடு பதித்து முத்தமிட்டுக் கொள்ளும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

அதைப் பார்த்த ரசிகர்கள் ’’அட, ஹீரோயினுக்கு அழுத்தமான முத்தம் கொடுப்பதில் கமலையே மிஞ்சு விட்டாரே தனுஷ்’’ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே ”வடசென்னை படம் எனது கனவு படம். ரசிகர்கள் தான் எனது பலம்” என்று டீஸருக்கு வரவேற்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் தனுஷ்.