வித்தைக்காரன்- விமர்சனம்
ஒரு மேஜிக் கலைஞன் கொள்ளையில் ஈடுபட்டால் என்னவாகும்?
சிறு வயதில் தனக்குள் தன் தந்தை மூலம் புகுந்த மேஜிக்-ஐ வைத்து லாஜிக்கோடு கொள்ளையடிக்கிறார் ஹீரோ சதிஷ். எல்லாப் படத்திலும் போல கொள்ளையடிக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுப்பது என்ற சீன் ஏதும் போடாமல் படத்தை முடித்துள்ளனர். அதுவொரு ஆறுதல். சதிஷுக்கு கொள்ளையால் ஏற்படும் தொல்லைகளுக்குப் பின் சில ட்விஸ்ட்கள் இருக்கின்றன. அவைதான் படத்தின் கதை எனலாம்
தன் ஆவ்ரேஜான நடிப்பை இப்படத்திலும் கொடுத்துள்ளார் சதிஷ். எமோஷ்னல் மற்றும் டான்ஸை இப்படத்தில் முயற்சித்துள்ளார். ஆனந்த் ராஜ் வழக்கமான மாடுலேசனிலே பேசினாலும் சில இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார். நாயகி சிம்ரன் குப்தா பெயரில் மட்டும் தான் கெத்து. படத்தில் பெரிதாக அவரை யூஸ் பண்ணவில்லை. சுப்பிரமணிய ஷிவா, சாம்ஸ், ஜான் விஜய்,மதுசூதனராவ் என பல நடிகர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்
யுவா கார்த்திக்கின் ஒளிப்பதிவு சின்னபட்ஜெட் படம் என்பதை நமக்கு உணர்த்தாமல் இருக்கிறது. சபாஷ். VBR தன் பின்னணி இசையால் படத்தை முன்னணியில் நிறுத்த போராடியுள்ளார்.
இன்ட்ரெஸ்டிங்கான கதை தான். ஆனால் அதை குழப்பமான திரைக்கதையால் அணுகியுள்ளார் இயக்குநர் வெங்கி. காட்சிகளில் புதுமையான ஐடியாக்களையும் தெளிவான திரைக்கதையையும் அமைத்திருந்தால் இந்த மேஜிக் சோ-க்கு இன்னும் ஒரு சோ புக் பண்ணலாம்
2.5/5