யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாட அரிய வாய்ப்பு!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா – கிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் தான் ‘யட்சன்’.
யு டிவி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாக உள்ளது.
இதையொட்டி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய பாடகர்களுக்கு தன் இசையில் பாடும் வாய்ப்பை தர இருக்கிறார்.
அதற்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
யட்சன் படத்திலுள்ள ஒரு பாடலான “கொஞ்சம் கொஞ்சலை” பாடலைக் கேட்டு அதை உங்கள் சொந்த குரலில் ரெக்கார்ட் செய்து யுவனுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் அந்த குரல்களில் சிறந்த பாடகர்களை யுவன் ஷங்கர் ராஜா அவரது படங்களில் பாட வைக்கப் போகிறார்.
உங்கள் குரல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் reach@u1records.in. மேலே உள்ள மின்னஞ்சலுக்கு வரும் குரல்களை நேரடியாக யுவன் சங்கர் ராஜா தான் தேர்வு செய்வார்.
கூடுதல் விபரங்களுக்கு கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள்.