வேறு வழியில்லாமல் தான் விவேகம் படத்தை ஓட்டுகிறோம்… : தியேட்டர் உரிமையாளர்கள் கதறல்

Get real time updates directly on you device, subscribe now.

ajith

ஒரு படத்தின் முதல் நாள் வசூல், முதல் மூன்று நாள் வசூல், முதல் வார வசூல் என எந்த வசூல் விபரமாக இருந்தாலும் அது எல்லாவற்றையும் அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் முறையாக அறிவிக்க வேண்டும். அதுதான் உண்மையான வசூல் விபரமாகவும் இருக்க முடியும்.

ஆனால் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் அப்படி எந்த ஒரு வசூல் விபரமும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மாறாக அஜித் ரசிகர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஒரு கணக்கைப் போட்டு முதல் நாள் வசூல் இத்தனை கோடி, மூன்று நாள் வசூல் இத்தனை கோடி, ஒரு வார வசூல் இத்தனை கோடி என்று ஒரு தொகையை போட்டோஷாப் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சில அதி தீவிர ரசிகர்களோ 4 நாட்களிலேயே விவேகம் 100 கோடியை வசூல் செய்து விட்டது என்றும், பாகுபலி வசூலை மிஞ்சு விட்டது என்றும் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts
1 of 53

இப்படி அஜித்தின் விவேகம் படம் மாபெரும் வெற்றிப்படம் என்று அவரது ரசிகர்கள் கூவிக்கொண்டிருந்தாலும், வாங்கிய விநியோகஸ்தர்களோ கடும் கொந்தளிப்போடு இருக்கிறார்கள்.

ஆமாம், விவேகம் படத்தால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சுமார் 40 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

”உண்மை என்னவென்றே தெரியாமல் அஜித் ரசிகர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பல கோடிகளை வசூல் செய்து விட்டதாக செய்திகளை பரப்புகிறார்கள். அதில் கொஞ்சம் கூட நியாயமில்லை, வாங்கிய எங்களுக்குத் தெரியாத வசூல் விபரம் ரசிகர்களுக்கு எப்படித் தெரியும்? என்று கோபத்தோடு கேள்வி எழுப்பும் அவர்கள் இந்த நஷ்டத்தை அஜித்தும், படத்தின் தயாரிப்பாளரும் தான் ஈடுகட்ட வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் விவேகம் படத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஓரளவுக்காவது திரும்ப எடுக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகவே இன்றுவரை பல தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடாமல், தொடர்ந்து மூன்றாவது வாரமாக திரையிட்டு வருகிறார்களாம்.

அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து திரையிட்டு முடிந்த வரை போட்ட பணத்தை எடுப்போம், வேறு என்ன செய்வது? என்று கதறுகிறார்கள் விவேகம் படத்தை நம்பி திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள்.