சிகரெட்டை ஸ்டைலாக ஊதித்தள்ளும் அமலாபால் : ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்தார்.
இதனால் அவரை திருமணம் செய்த இயக்குநர் ஏ.எல்.விஜய் வீட்டாருக்கும், அமலாபாலுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் பரஸ்பரம் பிரிந்து தற்போது அவரவர் வேலையைப் பார்த்து வருகிறார்கள்.
குறிப்பாக விஜய்யை விவாகரத்து செய்த மறுகணமே அடுத்தடுத்த புதிய படங்களை கமிட் செய்வதில் கவனம் செலுத்தி வரும் அமலாபால் அப்படி கமிட் செய்கிற படங்களில் படு கவர்ச்சியாக மட்டுமில்லாமல், தர லோக்கலாகவும் இறங்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.தற்போது சுசிகணேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திருட்டுப் பயலே 2 படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருக்கும் அமலாபால் மலையாளப் படம் ஒன்றில் சிகரெட் பிடிக்கும் காட்சியிலும் ஒன்றி நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
கையில் ஒரு சிகரெட்டை வைத்து ஸ்டலாக அவர் உள்ளே இழுத்து மூக்கு வழியாக புகை விடும் அந்தக் காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையையும் கிளப்பி விட்டிருக்கிறது.