ஹரி இருக்கட்டும்… : ஏ.ஆர்.முருகதாஸையும் விட மனசில்லையாம் விஜய்க்கு!

ஹிந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இன்னும் கொஞ்சம் காட்சிகளும், ஒரே ஒரு பாடல் காட்சியையும் எடுத்து முடித்தால் ஷூட்டிங் ஓவர்.
இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் யாரை வைத்து இயக்கப் போகிறார்? என்பதில் தான் பெருங்குழப்பம் நீடித்து வந்தது.
இப்போது அந்த குழப்பத்துக்கு விடை கிடைத்திருக்கிறது.
‘அகிரா’வை முடித்த கையோடு தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தமிழ் – தெலுங்கு என இருமொழிப்படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். அந்தப்படம் முடியவும் பாலிவுட் ஹீரோ சல்மான்கானை வைத்து ஒரு ஹிந்திப்படம் இயக்கப் போகிறார்.
அதற்கான கிரவுண்ட் ஒர்க் அதிகம் என்பதால், அதற்கு முன்பாக தனது ஆஸ்த்தான ஹீரோவான விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப்படம் 2016 ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
விஜய்யின் 60-வது படத்தை ஹரி இயக்கப் போகிறார் என்கிற தகவல் வந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸையும் விட மனசில்லையாம் விஜய்க்கு. ஆகவே ஹரி படம் முடியவும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் ஹிட் காம்போ இணைவார்களாம்.