ரைட்டர்- விமர்சனம்
அதிகாரத்திற்கு எதிராக நீலம் புரொடக்ஷன் எழுதியிருக்கும் இன்னொரு ரைட்டப் ரைட்டர் படம்
இரு மனைவிகள் ஒரு மகன் என சிம்பிள் ரைட்டராக காவல்துறையில் பணியாற்றுபவர் சமுத்திரக்கனி. தன் போலீஸ் வாழ்நாளில் யாரையும் கை நீட்டி அடித்திராத சமுத்திரக்கனியால் ஒரு அப்பாவி இளைஞனுக்கு காவல்துறை உயர் அதிகாரிகளால் நடத்தப்படும் அநீதியை தடுக்க முடிந்ததா? என்பதே ரைட்டரின் கதை
சமுத்திரக்கனிக்கு விசாரணைக்குப் பிறகு இந்தப்படத்தில் ஒரு அழுத்தமான பாத்திரம். மின்னுகிறார். அவருக்கு அடுத்ததாக குறைவான காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார் சுப்பிரமணியசிவா. ஹரியின் நடிப்பில் நல்ல முன்னேற்றம். இனியா சற்று நேரம் வந்தாலும் அபாரம். போலீஸ்டேசனில் எடுபிடி வேலை செய்யும் கேரக்டரின் அட்ராசிட்டி அசத்தல்
படத்தின் பலங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது வசனங்கள். தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட வசனங்கள் அனைத்துமே அருமை..ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் படத்தின் தேவையை உணர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். பின்னணி இசையில் கோவிந்த் வசந்தா தன் கைவரிசையை சிறப்பாக காட்டியிருக்கிறார்
யாரும் தொடத்துணியாத விசயத்தை கையில் எடுக்கும் நாயகன் ஹரியின் கதாப்பாத்திரம் மிகத்துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் திரைக்கதையில் நிறைய முக்கியத்துவம் கொடுத்து உழைத்திருக்கிறார் இயக்குநர். அதிகாரத்திற்கு எதிராக எழுதப்படும் எல்லா எழுத்தும் எழுத்தர்களும் வரவேற்கப்படவேண்டும். அதனால் ரைட்டரை நாம் வரவேற்போம்
4/5