உள்ளார்ந்த அன்பை பெற்ற இசைஞர்! Birthday Special
ஒருபெரிய அரசியல் தலைவரின் பிறந்தநாளைக் நிறையபேர் கொண்டாடுகிறார்கள் என்றால் அதில் அரசியல் இருக்கும். ஆனால் ஒரு கலைஞனின் பிறந்தநாளை இணைய சமூகமும் இளைய சமூகமும் இணைந்து நாடே வியக்கும் அளவில் கொண்டாடுகிறார்கள் என்றால் நிச்சயம் அதில் இருப்பது உள்ளார்நத அன்பைத் தவிர வேறொன்றுமில்லை. இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை இசை ரசிகர்கள் அத்தனை பேரும் அப்படிக் கொண்டாடுகிறார்கள். இளையராஜாவிற்கு நம் மண் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறது என்பதன் சாட்சியாகத் தான் அவருக்கான வாழ்த்துகளைப் பார்க்க முடிகிறது.
” இத்தனை வாழ்த்துகளையும் பெற்று இன்னும் இசையால் வாழ்ந்து இசையாய் வாழ்ந்து எல்லா இதயங்களையும் மகிழ்ச்சியாக்குங்கள் இசைஞானியே!”