உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒரே மதிப்பு- ராம்
தமிழ்சினிமா ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ஏழுகடல் ஏழுமலை. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின்பாலியும் சூரியும் நாயகர்கள். இது போதாதா எதிர்பார்ப்பிற்கு. போதாததிற்கு சமீபத்தில் நடந்த இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் இன்னும் அசத்தியது. இயக்குநர்கள் வெற்றிமாறன், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்வுக்கு வந்திருந்தனர். அனைவரின் பேச்சும் படம் மீதான எதிர்பார்ப்பையும் மரியாததையையும் அதிகப்படுத்தியது. நிகழ்வில்
*இயக்குநர் ராம் பேசும்போது,*
“ஏழு கடல் ஏழுமலை’ அக்டோபர் ஒன்றாம் தேதி வருகிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் எலியோ யானையோ மரமோ புல்லோ எல்லாமே உயிர் தான். அதுதான் படத்தில் கதை. இப்ப ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘கற்றது தமிழ்’ படம் பார்த்தேன். அப்ப நாம எல்லாம் எப்படி இருந்தோம் இன்னைக்கு அப்படி இருக்கோமா அப்படின்னு தோணுச்சு. நிறைய மாற்றமாகி இருக்கு. ஆனால் நான் அப்படியே தானே இருக்கிறேன். முதன்முதலில் கற்றது தமிழ் படம் எடுத்தப்ப நா முத்துக்குமார் தான் என்னை யுவன் சங்கர் ராஜா கிட்ட கூட்டிட்டு போனார். ஒரு 30 நிமிஷம் கூட கதை சொல்லி இருக்க மாட்டேன். இந்தப் படம் நான் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டாரு. அன்று தொடங்கிய நட்புதான்.. அவர் நோ சொன்னால்தான் நான் வேறு இடத்துக்குப் போக முடியும். அடுத்த படமும் அவர்தான் பண்றாரு.

அதே சமயம் எங்களுக்கு இடையேயானது வெறும் மியூசிக் டைரக்டர் இயக்குநர் நட்பு அல்ல நலம் விரும்பிகளின் நட்பு எங்களுடையது.
‘பறந்து போ’ டைம்ல திடீர்னு ஒரு சிச்சுவேஷன் 22 பாட்டு ஆயிடுச்சு. ஆனா அவரு துபாயில் இருக்காரு. அப்ப அவர் நம்ம பிரண்டு சந்தோஷ் தயாநிதி இருக்காரு. அவர வச்சு பண்ணுங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு சொன்னாரு.. இப்ப அதே மாதிரி ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தை எல்லாமே முடிச்சிட்டோம் ஒரு வருஷம் இருக்கு ஆனா நான் மொத்த ஆர்டரை மாத்திட்டேன் அந்த டைத்துல திரும்ப போன அவர் கான்செர்ட்ல இருக்காரு நாங்க இங்க ஓடிடில படம் கொடுக்கணும். அப்பவும் என்ன சொன்னார் என்றால் சந்தோஷ் கிட்ட போங்க கரெக்டா பண்ணித் தருவாரு அப்படின்னு சொன்னாரு. அந்த வகையில் தன் படத்துக்குள்ள இன்னொரு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய தன்னம்பிக்கையும் என் மேல் இருக்கக்கூடிய அன்பும் வேண்டுமே.. அவர்கிட்ட இருக்கு” என்று கூறினார்.