முதல் நீ முடிவும் நீ- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பள்ளிக்கூட வாழ்வை சொல்லும் படங்கள் எப்படியும் சொல்லிக்கொள்ளும் படி மெச்சத்தகுந்த படமாகவே அமைந்து விடுகிறது. அந்தவகையில் சிறிய முயற்சியில் ஓரளவு தேறி பாஸ்மார்க் வாங்குகிறது முதல் நீ முடிவும் நீ

நாயகன் நாயகி இருவரும் பள்ளிக்காலத்தில் காதலர்கள். அவர்களின் காதலுக்கு இன்னொரு பெண்ணின் ஒருதலைக்காதல் பிரச்சனையாக உருவெடுக்கிறது. ஹீரோ ஹீரோயின் எப்படி இணைந்தார்கள்…பள்ளிக்கால சிறுசுகளின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி மாற்றங்கள் என்ன? என்பதே கதை

நடிகர்களில் யாரையும் முதன்மைப் படுத்தவே முடியாது. ஏன் என்றால் அனைவருமே முதல் வரிசை நாயகர்கள் போல அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளனர். இயக்குநர் தர்புகா சிவா ஜெயித்துள்ள முதல் இடம் இது. அத்தனை பேரின் நடிப்பையும் அவ்வளவு இயல்பாக வாங்கியுள்ளார் சபாஷ்!

படத்தின் பின்னணி இசை கேமரா வொர்க் இரண்டுமே சரியான கோர்வை. ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் மட்டும் படம் நெடுக வீக் ஆக இருக்கிறது..பட்ஜெட் காரணம் என்பது புரிகிறது. 99 காலகட்டத்தை கொண்டு வர நன்றாக உழைத்திருப்பதும் குறை சொல்வதற்கில்லை..

புறம் சார்ந்து கிடைக்கும் வெற்றிகரமான வாழ்வை விட மனதுக்குப் பிடித்தவரோடு அகம் சார்ந்து வாழும் வெற்றிகரமான வாழ்க்கை தான் அர்த்தமுள்ளது என்பதை படம் போகிறபோக்கில் சொல்லிச்செல்கிறது. நச்சென்று ஒரு ஹைக்கூ படித்த feel.

முன்பாதி மற்றும் பின்பாதி இரண்டிலும் 10 நிமிடங்களை வெட்டி எறிந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போதும் நன்றாகவே இருக்கிறது

3/5