“மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது!
இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ‘மம்மி சொல்லும் வார்த்தை’ என ஆரம்பிக்கும் இப்பாடல் படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையிலும், இன்றைய நவீனகால இளைஞர்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.
வாழ்வில் ஜெயிக்க மிக உயர்ந்த கல்வித் தகுதியை அடைய வேண்டுமென வற்புறுத்தும், பெற்றோரின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை நுட்பமாகக் கேலி செய்யும் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடல், குழந்தைகள், பெற்றோரைப் அல்லாமல் சுதந்திரமாக வாழ்வதைப் பற்றியும், நவ நாகரீக இளைஞர்களின் உலகைப் படத்தின் கதாப்பாத்திரங்கள் வழியாக அழகாகச் சித்தரிக்கிறது.
இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார், பிரியா மாலி, சரத் சந்தோஷ், ஹிருத்திக் ஜெயகிஷ், நேஹா கிரிஷ், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் RS ரக்தக்ஷ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். நடன இயக்குநர் ஆடம் முர்ரே இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.