ஜீவாவின் கபில்தேவ் அவதாரம்
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டு என்பது தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரையும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. இங்கே கிரிக்கெட் வீரர்கள் இளைஞர்கள் பலரின் ஆதர்ஷம்.
கிரிக்கெட்டை இளைஞர்களிடம் சிறுவர்களிடம் கொண்டு போவதில் பல முன்னணி வீரர்கள் இந்தியாவின் அடையாளமாய் இருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு ஒரு அடையாளமாய் இங்கே கிரிக்கெட்டை பரப்பிய ஆளுமைகளுல் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் மிக முக்கியமானவர். தனது தனித்த திறமையாலும், ஸ்டைலான ஆட்டத்தாலும் பலரையும் கவர்ந்தவர்.
1983 உலககோப்பை வாங்கிய அணியில் பெரும் பங்கு வகித்தவர். இப்போது இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, உலககோப்பை வென்ற கதையை சொல்லும் “83” படத்தில் ஶ்ரீகாந்தாக அவதாரமெடுத்துள்ளார் நடிகர் ஜீவா. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்பதால் நிச்சயமாக நல்ல ரீச் கிடைக்கும் என்று படக்குழு நம்புகிறது