83 படத்தில் கமலஹாசன்

Get real time updates directly on you device, subscribe now.


 
கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து “83” படத்தின் தமிழ் பதிப்பை  வழங்குகிறார்கள்.

இந்திய சினிமாவில்  பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்ககூடியவர் கமலஹாசன்.  அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  ( Rajkamal Films International ) தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள் தரமானதாக இருக்கும்.

Related Posts
1 of 3

அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது குறித்து திரு. கமலஹாசன் கூறியதாவது…
83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.

அது மட்டும் அல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில் இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு. முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கையும், மனத்திடமும், இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த கதையை, கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி, உலககோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி.