மீண்டும் தமிழுக்கு வரும் டாப்சி
ராகவா லாரன்ஸ் உடன் ‘காஞ்சனா 2’ படத்தில் ஜோடி போட்டவர் டாப்சி.
தாறுமாறான வசூலை அள்ளி மிகப்பெரிய வெற்றிப்படமான அந்தப் படத்துக்குப் பிறகும் டாப்சிக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் தெலுங்கு, ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.
ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் அவர் இணைந்து நடித்த ‘பிங்க்’ திரைப்படம் வெற்றி பெற்றதால் கைவசம் 4 புதிய ஹிந்திப் படங்களை வைத்திருக்கிறார் டாப்சி.
தொடர்ந்து ஹிந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்தவரை மீண்டும் கோலிவுட் பக்கம் வர வைத்திருக்கிறது ‘ஆர்.எக்ஸ் 100’ திரைப்படம்.
தெலுங்கில் வெளியாகி ஹிட்டான இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. ஆதி நாயகனாக நடிக்க உள்ள இந்தப் படத்தில் நாயகியாக டாப்சியை நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன.