டிவி சேனல் ஆரம்பிக்கப் போவது உண்மை தானா? – விளக்கம் கொடுத்த ரஜினி

Get real time updates directly on you device, subscribe now.

விரைவில் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்று பல மாதங்களாக சொல்லிக் கொண்டிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள்ளாகவே தனியாக அவர் ஒரு டிவி சேனல் ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி பரவியது.

அதுகுறித்து ரஜினி தரப்பிலிருந்து உடனே எந்த விளக்கமும் கொடுக்காத நிலையில், எனது பெயரில் டிவி சேனல் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மை தான் என்று ரஜினி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Related Posts
1 of 105

”டிவி சேனலுக்காக எனது பெயரில் புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்க பெயர் பதிவு செய்துள்ளோம். அது உண்மை தான். எனது பெயரில் வேறு சிலர் டிவி சேனல் ஆரம்பிக்கப் போவதாக செய்தி வந்தது. அதனால் தான் யாரும் என் பெயரில் பதிவு செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் ரஜினி.

தங்களது கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க டிவி சேனலை பெரும்பாலான கட்சிகள் ஆரம்பித்திருக்கின்றன. அதேபோல ரஜினியும் டிவி சேனல் ஆரம்பிக்க முடிவு செய்திருப்பது, திட்டமிட்டபடி அவர் விரைவில் அரசியல் கட்சியை அறிவிப்பார் என்றே தெரிகிறது.