போட்டி போடும் தெலுங்கு ஹீரோக்கள்! : தமிழ் ஹீரோக்களுக்கு வந்த புதிய தலைவலி

Get real time updates directly on you device, subscribe now.

vishal

பொதுவாகவே தமிழில் ஹிட்டான படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகும், அல்லது டப் செய்யப்பட்டு ரிலீசாகும். எப்படி ரிலீசானாலும் அங்கு தமிழ் ஹீரோக்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது.

இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால் ஆகிய முன்னணி ஹீரோக்களின் படங்கள் சமீபகாலமாக தமிழில் ரிலீசாகும் அதே சமயத்திலும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாகின்றன. இப்படி தங்களுக்கென்று ஆந்திராவில் ஒரு லாபச்சந்தையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

தமிழ் நடிகர்களின் இந்த லாப ஆக்கிரமிப்பு அங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு தலைவலியாக இருந்து வந்தது. ஆனாலும் அமைதி காத்து வருகிறார்கள்.

Related Posts
1 of 202

இப்போது எப்படி தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழ் ஹீரோக்கள் பெருத்த தலைவலியாக இருந்தார்களோ அதேபோல தமிழ் ஹீரோக்களுக்கு தெலுங்கு ஹீரோக்கள் தரப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தலைவலி வர ஆரம்பித்திருக்கிறது.

ஆமாம், தமிழில் ஹிட்டான படங்களின் தெலுங்கு ரீமேக்கை அங்குள்ள சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண் என முன்னணி ஹீரோக்களே வாங்கி நடிக்க ஆரம்பித்திருப்பதால் அங்கு டப் செய்யப்படும் தமிழ் ஹீரோக்களின் படங்கள் வசூல் குறையத் தொடங்கியிருக்கிறது.

அதோடு ராணா, பிரபாஸ் என அடுத்தடுத்த தெலுங்கு ஹீரோக்கள் நடித்த நேரடித் தமிழ்ப்படங்களும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற ஆரம்பித்திருப்பது தமிழின் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.