விக்ரம் அனுப்பியது பணச்செய்தி அல்ல..படச்செய்தி

Get real time updates directly on you device, subscribe now.


“சினிமா பொறுப்புள்ள” நடிகர் என்ற பெயரை பல காலமாகவே வாங்கி வைத்திருப்பவர் நடிகர் விக்ரம்..சினிமாவிற்காக தன் உடலை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞன் அவர். சமூகப் பிரச்சனைகளுக்காக அவரது குரலும் கரமும் கொஞ்சம் ஸ்லோவாக நீண்டாலும் இந்தக் கொரோனா நேரத்தில் அவர் தரப்பில் இருந்து ஒரு செய்தி வந்திருந்தது. “விக்ரம் கொடுத்தது எத்தனை கோடி?” என்று ஓடோடிப் பார்த்தால், அட அது வேற மேட்டர்!

Related Posts
1 of 17

நடந்தது என்னவென்றால் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தோடு அவர் சினிமாவிற்கு டாட்டா போட்டுவிட்டுப் மகன் துருவ் விக்ரமை சூப்பர் ஸ்டார் ஆக்கும் வேலையில் இறங்கப் போகிறார் என்ற செய்தியை யாரோ கள்ளச் சரக்கு பால் இறக்கி விட்டிருக்கிறார்கள். பதறிப்போன விக்ரம் அதை மறுத்து செய்தியை வெளியீட்டிருக்கிறார். மேலும் இந்தக் கொரோனா காலத்தில் இப்படியான செய்திகளை வெளியீடுவது பொறுப்பற்றத் தனம் என்றும் சொல்லி இருக்கிறார்.