அமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்!

Get real time updates directly on you device, subscribe now.

‘மேயாத மான்’ வெற்றிப்படத்தைக் கொடுத்த ரத்னகுமார் இயக்கத்தில் ‘ஆடை’ படத்தில் நடித்து வருகிறார் அமலாபால்.

டைட்டிலில் ஆடை இருந்தாலும் படத்தில் சில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்திருக்கிறார் அமலாபால். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் டீசரில் அமலாபால் ஆடையில்லாமல் இருக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Posts
1 of 144

இதற்கிடையே இந்தப்படத்தின் டீசரைப் பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலு வெர்ஷன் ஒன்றை வெளியிட்டு அமலாபாலை செமையாக கலாய்த்திருக்கிறார்கள்.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இயக்குனர் ரத்னகுமார் ”இப்போதெல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் வடிவேலு வெர்ஷன் என்று ஒரு வீடியோ வந்து விடுகிறது. ‘ஆடை’ படம் சுதந்திரத்தைப் பற்றி பேச உள்ளது. நான் பேச்சுரிமையை மதிக்கிறேன். அமலாபால் மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.