‘ஆடை’ படத்தில் அரைகுறை ஆடையுடன் அமலாபால்!

Get real time updates directly on you device, subscribe now.

‘மேயாத மான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ரத்ன குமார் இயக்கும் புதுப்படத்துக்கு ஆடை என்று டைட்டில் வைத்துள்ளனர்.

வி ஸ்டுடியோஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிக்கும் இப்படத்தில் அமலாபால் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலாபால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக் கொண்டுள்ளாராம் .

“இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்து கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா) அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படமாக இந்த ஆடை இருக்கும்.

பொதுவாகவே இது மாதிரியான, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம்” என்று கூறினார்.

Related Posts
1 of 11

இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது.

மேலும் படத்தில் நடிப்பது பற்றி அமலாபால் கூறியதாவது…

‘ஆடை’ படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. ‘ஆடை’ சாதாரண படமும் அல்ல. இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களதும் ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும்.

இயக்குனர் ரத்னகுமரின் மேயாத மான் பாரத்த பிறகு அவர் மீதும் அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் ஆடையின் கதை சொன்ன போது அந்த கதையும் கதை சொன்ன விதமும் என்னை பெரிதும் கவர்ந்தது. கதை என்னை மிகவும் பாதித்தது. அவ்வளவு உணர்ச்சிகரமான கதை” என்றார் அமலா பால்.

முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அரைகுறை ஆடையுடன் அமலாபால் காட்சி தந்தது ரசிகர்களை அதிர வைத்தது. போஸ்டர் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஷால், ”அமலாபாலின் தைரியத்தை பாராட்டுகிறேன். சிறப்பான பர்ஸ்ட்லுக் போஸ்டர். புரியாத புதிராக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பாராட்டியிருந்தார்.