டம்மி ஆக்கப்பட்டதால் கடுப்பு : அதர்வா படத்திலிருந்து வெளியேறினார் ஆனந்தி!

Get real time updates directly on you device, subscribe now.

anandhi

றிமுக இயக்குநர் இளவரசு இயக்கும் படம் தான் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா ஆகிய நான்கு நாயகிகள் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆரம்பிக்கப்பட்ட புதிதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து திடீரென விலகியிருக்கிறார் ஆனந்தி.

Related Posts
1 of 4

அவருக்குப் பதிலாக இப்போது அதிதி என்கிற புதுமுகத்தை படத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள். ஆனந்தியின் இந்த விலகலுக்கு காரணம் கடுமையான கால்ஷீட் சொதப்பல் தானாம்.

அப்படியொன்றும் பிஸியான நடிகையாக ஆனந்தி இல்லை என்றாலும் கைவசம் வைத்திருக்கும் ஒன்றிரெண்டு படங்களுக்கு கூட தேதிகளை ஒதுக்கிக் கொடுப்பதில் ஆனந்தி சொதப்பியது தான் இந்தப் படத்திலிருந்து அவர் வெளியேறக் காரணம் என்கிறார்கள்.

ஆனந்தி கால்ஷீட் சொதப்பலால் தான் இந்தப் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று படக்குழு தெரிவித்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாததும், டம்மியாக இருந்ததும் தான் அவர் படத்திலிருந்து வெளியேற முக்கிய காரணம் என்றும் சொல்கிறார்கள்.