ஆண்பாவம் பொல்லாதது- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இன்றைய இளம் தம்பதிகள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பேசியுள்ளது ஆண்பாவம் பொல்லாதது படம்

ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் இருவரும் திருமணம் செய்கிறார்கள். முதலில் இருவருக்கும் நிறைய கருத்துக்களில் உடன்பாடு இருக்கிறது. சில இடங்களில் ரியோ சகித்துக்கொண்டும் செல்கிறார். போகப்போக இது ஈகோவாக வெடித்து டிவோர்ஸ் வரை செல்கிறது. அதன்பின் இவர்கள் வாழ்வில் மீண்டும் தென்றல் வீசியதா என்பதே படத்தின் மீதிக்கதை

ரியோ தனக்கு என்ன வரும் என்பதை அறிந்து களமாடி வருகிறார். நிச்சயமாக நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட படத்தின் மற்றொரு ஹீரோ என்று ஆர்.ஜே விக்னேஷை சொல்ல முடியும். க்ளைமாக்ஸ் எமோஷ்னல் காட்சிகளில் கூட அவரது நல்ல நடிப்பு எடுபடுகிறது. ஈக்குவாலிட்டி கதையில் மட்டுமல்ல.. நடிகர்களுக்கு காட்சிகளைப் பிரித்துக்கொடுப்பதிலும் இருக்கிறது என்பதை நாயகிக்கான காட்சிகளில் காண முடிந்தது. மாளவிகா மனோஜ் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஷீலா கேரக்டரும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அவரும் நன்றாக நடித்துள்ளார்

சித்துகுமார் இசையில் பாடல்கள் ஒரிஜினல் ஸ்கோர் இரண்டுமே தரம். ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் சின்னச் சின்ன ப்ரேம்களிலும் கவனம் ஈர்க்கிறார். சிறிய பட்ஜெட் என்ற பிம்பத்தை தகர்க்க முயற்சித்துள்ளார்.

கொஞ்சம் பிசகினாலும் பெண் சுதந்திரத்தை விமர்சனம் செய்யும் படம் என்ற முத்திரைக்கு படம் ஆளாகியிருக்கும். ஆனால் இயக்குநர் சிவகுமார் முருகேசன் கவனத்துடன் கையாண்டுள்ளார். இல்லற வாழ்வில் இருவரின் பங்கும் சமமாக இருக்கிறது. முக்கியமாக ப்ளேமிங் என்ற கான்செப்ட்-ஐ இல்லறத்துணைகள் மறக்க வேண்டும் என்ற ஐடியாலஜியை சரியாகப் பேசியுள்ள ஆண் பாவம் பொல்லாதது படம் வரவேற்கத்தக்க படைப்பு
3.5/5