‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை தூக்கியெறிந்த ரஜினி – ஏன் தெரியுமா?

தமிழக அரசியல் களத்தில் தானும் இறங்கத் தயாராகி விட்டார் ரஜினிகாந்த். அதற்கான ஆயத்தை வேலைகளை முடுக்கி விட்டிருக்கும் அவர் 2013ம் ஆம் ஆண்டு @superstarrajini என்ற பெயரோடு ட்விட்டருக்கு வந்தார்.
ஆனாலும் மற்ற பிரபலங்களைப் போல ட்விட்டரில் அதிகம் புழங்குவதில்லை. அவர் எந்தக் கருத்தை எப்போது போட வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது தான் அதைப் பற்றி ட்வீட் போடுவார்.
இருந்தாலும் அவரை சுமார் 45 லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள்.
இந்நிலையில் @superstarrajini என்று தனது ட்விட்டர் அக்கவுண்ட்டுக்கு பெயர் வைத்திருந்த ரஜினி தற்போது தன் பெயருக்கு முன்னால் இருந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தூக்கி விட்டார்.

அதாவது, @rajinikanth என்று தனது அக்கவுண்ட் பெயரை மாற்றி விட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இணைந்த ரஜினி அங்கும், Rajinikanth என்ற பெயரையே வைத்திருக்கிறார்.
சுமார் 40 ஆண்டு காலம் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரஜினியே தற்போது அந்தப் பட்டத்தை தூக்கியெறிந்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை ஒரு சினிமா நடிகராக மட்டுமே இருந்ததால் தனக்கு அந்தப் பட்டம் பொருத்தமாக இருந்தது என்றும், தற்போது தீவிர அரசியலில் இறங்க முடிவெடுத்து விட்டதால் இனியும் அந்தப் பட்டத்தோடு பொதுமக்களை சந்திக்கச் செல்வது பொருத்தமாக இருக்காது? என்று நினைத்ததால் தான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினி துறப்பதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு சூட்டியவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு என்பது குறிப்பிடத்தக்கது.