ஆட்கள் தேவை- விமர்சனம்

பெண்சார்ந்த படங்கள் அதிகமாக வரவேண்டும் என்ற உறுதிப்பாடு இன்றைய இளம் படைப்பாளிகளிடம் இருப்பது வரவேற்க கூடிய ஒன்று. அதைச் சரியாக கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்குநரும் நடிகருமான சக்தி சிவன்.

ஆட்கள் தேவை படத்தின் கதை?

நமக்கு நன்குப் பழக்கப்பட்டது தான். பட்டதாரி இளைஞரான சக்திசிவன். நாயகி சந்திரலேகாவை காதலிக்கிறார். அவரும் தான். வளர்ந்து வரும் இக்காதலை கல்யாணம் வரை கொண்டு செல்ல தயாராக இருக்கிறார்கள் இருவரும். இந்நிலையில் நாயகி கடத்தப்படுகிறார். கடத்திய
நான்கு இளைஞர்களும் பலபெண்களை கடத்தி சீரழித்தவர்கள். அவர்களின் கொடூர செயல்களுக்கு துணையாக இருக்கிறார் வில்லன் ஈசன். அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் அரசியல்வாதி மைம்கோபி. இவர்களிடம் போராடி எப்படி ஹீரோ ஹீரோயினை மீட்டார் என்பதே மிச்சமுள்ள கதை

படத்தை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் சக்திசிவன். இரு பக்கமும் போகஸ் செய்தாலும் நடிப்பில் தேறி இருக்கிறார். இயக்கத்திலும் வருங்காலத்தில் ஏறி வருவார் என்று நம்பலாம்.

கார்த்திக் ராஜாவின் இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சுரேஷ்குமாரின் ஒளிப்பதிவு நச் என்றளவில் இல்லாவிட்டாலும் பச் என்று சொல்லும் அளவிலும் இல்லை. சமூக அக்கறையுள்ள கதையை தேர்ந்தெடுத்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்
ஆட்கள் தேவை நம்மை அதிகமாக ஈர்த்திருக்கும்.

இருந்தாலும் இப்படத்தைப் பார்த்து வரவேற்பது நம் கடமை!