‘ஸ்டார்டா’ வின் பிராண்ட் அம்பாசிடரான ஜீ. வி. பிரகாஷ்குமார்!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ எனும் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராக ஜீ. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.

Related Posts
1 of 13

இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது பாடகர் -இசையமைப்பாளர்- நடிகர்- தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுள்ள ஜீ. வி. பிரகாஷ்குமார், பாடகர்- பாடலாசிரியர்- நடிகர்- இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ், நடிகரும், தொகுப்பாளருமான அபிஷேக் ராஜா, நடிகர் ஷ்யாம் குமார், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார், தனஞ்ஜெயன், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.