ஒரே ஒரு படம் தாங்க… : மார்க்கெட்டை இழந்தார் ஜெய்!
ஒரே ஒரு படம் தன்னுடைய ஸ்டெடியான மார்க்கெட்டை இந்தளவுக்கு இறக்கிப் போடுமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை நடிகர் ஜெய்.
‘சுப்ரமணிய புரம்’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு தொடர்ந்து ‘பிக்கப்’ ஹீரோவாக இருந்த ஜெய் இடையில் சில தோல்விப் படங்களை கொடுத்ததால் மார்க்கெட் டவுண் ஆனது. பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கத்தில் ரிலீசான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ஹிட் மீண்டும் ஜெய்யின் மார்க்கெட்டுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டது.
ஆனால் இப்போது ஜெய்யின் நிலைமையோ தலை கீழ்.
எந்த இயக்குநரால் ஜெய்யின் மார்க்கெட் கொஞ்சம் ஸ்டெடியானதோ அதே ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கிய ‘வாலிபன்’ படம் ஜெய்யின் மார்க்கெட்டை பெரிய அளவில் ஆட்டம் காண வைத்துள்ளது.
அந்தப் படத்தின் படுதோல்வியால் ஏற்கனவே ஜெய்யை தங்கள் படங்களில் கமிட் செய்திருந்த ஒன்றிரெண்டு இயக்குநர்கள் கூட பின்னங்கால் பிடரிறியில் அடிக்க ஓடி விட்டார்களாம். அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்த சில தயாரிப்பாளர்களும் அதை திருப்பிக் கேட்டு போன் செய்கிறார்களாம்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெய் கொஞ்ச நாளைக்கு சோலோ பெர்பார்மென்ஸ் குட்பை சொல்வது என்றும், அதுவரைக்கும் டபுள், ட்ரிபுள் ஹீரோக்கள் படங்களில் ஒரு ஹீரோவாக வண்டியை ஓட்டுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களை வைத்திருந்த ஜெய்யின் கைவசம் தற்போது புகழ், தமிழ்ச்செல்வியும் தனியார் அஞ்சலும் என்று இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.