படிப்பு ஓவர்; பாயப் போகிறாராம் லட்சுமிமேனன்!

Get real time updates directly on you device, subscribe now.

Lakshmi-Menon2

கும்கி, சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்த லட்சுமிமேனன் இடையில் படிப்பு பாதியில் நின்றதால் அதற்காக கேரளாவுக்கு வண்டியேறி விட்டார்.

தொடர் ஹிட்டுகளை கொடுத்தவர் என்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தும் முதல்ல படிப்பு; அப்புறம் தான் நடிப்பு என்கிற கொள்கையோடு அத்தனை பட வாய்ப்புகளுக்கும் குட்பை சொல்லி விட்டு படிக்கப் போனார்.

இதனால் அந்த வாய்ப்புகள் எல்லாமே ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அவர் கேட்டகிரியில் இருக்கும் சக நடிகைகளுக்கு போய் விட்டது.

Related Posts
1 of 6

படிப்பை முடித்த கையோடு அஜித் தங்கச்சி கேரக்டரில் நடிக்க வேதாளம் படத்தில் வாய்ப்பு வந்தாலும் யோசிக்காமல் நடித்தார்.

இப்போது மீண்டும் பழையபடி ‘சிப்பாய்’, ‘ஜெமினி கணேசன்’ விஜய் சேதுபதியுடன் ரெக்கை என அடுத்தடுத்து கதாநாயகி வாய்ப்பு தேடி வர ஆரம்பித்திருப்பதால்

உற்சாகத்தில் இருப்பவர் இனி தொடர்ந்து வாய்ப்புகளை தக்க வைக்க தனது சம்பளத்தில் சலுகை காட்ட ஆரம்பித்திருக்கிறார். அவரின் இந்த முடிவு சக நடிகைகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்ன மீனைப் போட்டுத்தானே பெரிய மீனை புடிக்கணும்!