தீபாவளிக்கு வெளியாகும் லெஜெண்ட் சரவணனின் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது குறித்த ருசிகரத் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கூறியதாவது: “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும். நன்றி, வணக்கம்.”